Saturday, November 13, 2010

முதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட் அறிமுகம்

ஆம்கெட் நிறுவனம், புதிய வயர்லெஸ் ஆப்டிகல் ட்ராக் பால் கொண்ட கீ போர்டு25 ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ.2,995 என விலை குறிக்கப்பட்டிருக்கும் இந்த கீ போர்டு, இவ்வகையில் தயாரிக்கப்பட்ட முதல் கீ போர்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடனும், மேக் மற்றும் லினக்ஸ் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.இதில் உள்ள 800 டி.பி.ஐ. ஆப்டிகல் ட்ராக் பால் 360 டிகிரி சுற்றி இயங்கக் கூடியது. இது ஒரு வழக்கமான மவுஸ் போலவே செயல்படுகிறது. இந்த கீ போர்டு 365 மிமீது 156 மிமீ து 22 மிமீ, என்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக எங்கும் எடுத்துச் செல்லலாம். நான்கு நிமிடங்கள் இதனை இயக்காமல் இருந்தால், உடனே மின் சக்தி நிறுத்தப்படும் வகையில் இதில் வழி செய்யப்பட்டுள்ளது.இதன் ஆப்டிகல் ட்ரேக் பாலில் ஒரு ஸ்குரோல் வீல் மற்றும் இரண்டு செட் வலது மற்றும் இடது பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேற் புறத்தில் பத்து மல்ட்டி மீடியா கீகள் தரப்பட்டு இன்டர்நெட் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வற்றை இயக்குவதை எளிதாக்கு கின்றன. பெர்சனல் கம்ப்யூட்டர் களில் ஹோம் தியேட்டர் செட் செய்பவர்களுக்கு இந்த கீ போர்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment