Thursday, January 6, 2011

ஏப்ரலில் "ஸ்லெட்' தேர்வு - State Level Eligibility Test (SLET)

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.  

தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 

"நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும்.  தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில் விரிவுரையாளர் பணிக்கு முதுகலை பட்டப் படிப்புடன் "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும், பி.எச்டி. முடித்தவர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு 11.7.2009-ல் வழிகாட்டு நெறிமுறை வகுத்தது.  யுஜிசி-யும் இந்த புதிய நெறிமுறையைப் பின்பற்றி 30-6-2010 அன்று கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான புதிய விதிமுறையை வெளியிட்டது.  ஆனால், 12-8-2010 அன்று விரிவுரையாளர் பணிக்கு நெட் அல்லது ஸ்லெட் தகுதி இல்லாத எம்.ஃபில். பட்டதாரிகளையும் நியமிக்க வகை செய்யும் வகையில் யுஜிசி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.   இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.  

பிஎச்டி பட்டம் முடிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும் என்பதால், விரிவுரையாளராக நினைக்கும் முதுகலை பட்டதாரிகள் அனைவரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்து உள்ளனர். "நெட்' தேர்வைக் காட்டிலும் எளிதாக இருக்கும் என்பதால், இவர்களில் பெரும்பாலானோர் "ஸ்லெட்' தேர்வை எதிர்நோக்கியுள்ளனர்.   தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக "ஸ்லெட்' தேர்வு நடத்தப்படாததால், முதுகலை பட்டதாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.  

அண்மையில், தமிழக அரசு அனுமதி அளித்தும், யுஜிசி ஒப்புதல் கிடைக்காததால் தகுதித் தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்தது. 

இந்த நிலையில் தமிழகத்தில் "ஸ்லெட்' தகுதித் தேர்வை நடத்த யுஜிசி இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.   இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி. சுவாமிநாதன் கூறியது:  "ஸ்லெட்' தேர்வை நடத்த ஒப்புதல் பெறுவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் யுஜிசி அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தனர். இதன் மூலம் தேர்வை நடத்த யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இந்த வார இறுதியில் கிடைத்து விடும்.  பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் வரை நடைபெறும். எனவே, "ஸ்லெட்' தேர்வை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.  

இதற்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு "ஸ்லெட்' தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

SAIL - JOBS

Operator-cum-Technician / Attendant-cum-Technician -Trainee 
 
 
Eligibility: 
 
 
 
 
 
 
 


 
Location:  
Job Category: Last Date:
Job Type: Hiring Process:
Job Details

SAIL, recruiting applications for the post of  Operator-cum-Technician – Trainee/ Attendant-cum-Technician -Trainee in Salem Steel Plant

Post Name Qualification Discipline/No. of Vacancies Age  as on 01.10.2010
Operator-cum-Technician Trainee
Diploma in Mechanical or Electrical or Electronics/ Instrumentation or Metallurgy with 60% marks. (50% marks for SC/ ST candidates)
Diploma in Mechanical 4 18-28 yrs
Diploma in Electrical 3
Diploma in Metallurgy 5
Diploma in Electronics / Instrumentation 2
Total
14
Attendant-cum-Technician Trainee
 SSLC / HSC and ITI in Fitter / Machinist / Electrician trade with 60% marks (50% marks for SC/ ST).
ITI -Fitter Trade 40
ITI –Electrician Trade
26
ITI -Machinist Trade 30
Total
96
: Minimum period of two years which can be extendable by another two years as per requirement.
Period of Training


Application Fee: Rs. 250
(50 for SC/ ST candidates) Non-Refundable Demand Draft in favour of SAIL – A/c Salem Steel Plant Payable at Salem and drawn on State Bank of India, Salem Steel Plant Campus Branch.
Selection Procedure : Written test, Interview and Medical examination.


Pay during training period
Post
First Year
 Second Year
Operator-cum-Technician Trainee 
Rs.8250
 Rs.9350
Attendant-cum-Technician Trainee
Rs.6600
Rs.7700
Pay on regular employment after training period
Operator-cum-Technician – Trainee 
 Rs 9160-3%-13150
Attendant-cum-Technician -Trainee Rs.8630-3%-12080

 
How to apply
 
Applications typed on plain paper, giving full particulars as indicated in the prescribed format  should reach The Advertiser, POST BAG NO. 781, Circus Avenue Post Office, Kolkata 700 017 along with an A/C Payee Demand Draft 250/- (50/- for SC/ST candidates) Non-Refundable Demand Draft in favour of SAIL – A/c Salem Steel Plant Payable at Salem and drawn on State Bank of India, Salem Steel Plant Campus Branch.  Last Date for Submitting application within 15 days from the date of advertisement (19.01.2011). Application is to be sent only through ordinary post.
(Ref:The Hindu, Opportunities, dated 5th January 2011)
 
Company Profile
 
Steel Authority of India Limited (SAIL) is the leading steel-making company in India. It is a fully integrated iron and steel maker, producing both basic and special steels for domestic construction, engineering, power, railway, automotive and defence industries and for sale in export markets. SAIL is also among the four Maharatnas of the country's Central Public Sector Enterprises.

இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில அளவிலான பரிந்துரை

சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாநில அளவிலான பரிந்துரை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் விவரம் வருமாறு:

எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை தேர்ச்சியுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி  பெற்ற 1.1.2010 அன்று 57 வயதுக்குள் உள்ளவர்களுக்கான பதிவு மூப்பு விவரம்.முன்னுரிமை உள்ளவர்கள்தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்), பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) - 10.12.2010 வரை பதிவு செய்துள்ள அனைத்து முன்னுரிமை பிரிவைச் சார்ந்தவர்கள்.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (இதரர்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (இதரர்), பொதுப் பிரிவினர்- 10.12.2010 வரை பதிவு செய்துள்ள ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம் புரிந்தவர்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (இதரர்)- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி 19.01.2009 ஆகும்.மிகவும் பிற்பட்ட வகுப்பினர்- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி- 24.03.2008.பிற்பட்ட வகுப்பினர் (இதரர்) பொதுப் பிரிவினர்- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி: 26.05.2008. 

முன்னுரிமை இல்லாதவர்கள் (பதிவு மூப்பு அடைப்புக்குறிக்குள்)தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (பெண்கள்) (12.3.2007)- 09.06.1984-க்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (பொது) (27.02.2006)- 25.05.1986-க்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்) (24.03.2008)- 05.06.1984-ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொது) (12.03.2007)- 01.06.1975-க்குள் பிறந்தவர்கள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (11.10.2004)- 17.02.1984-க்குள் பிறந்தவர்கள், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (27.02.2006)- 28.03.1986-க்குள் பிறந்தவர்கள், பிற்பட்ட வகுப்பினர் (இதரர்) (01.12.2003)- 13.01.1983-க்குள் பிறந்தவர்கள்.

மேற்குறிப்பிட்ட தகுதி பெற்ற மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு தங்களது அனைத்து கல்விச் சான்றுகள், முன்னுரிமைச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பதிவு விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் பெறப்படும் விசாரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் சு.பெ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உதவி வேளாண் அலுவலர் பதிவு மூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

திண்டுக்கல், ஜன. 5: வேளாண் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் பணிக் காலியிடங்களுக்கு, மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல், திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. 

  இப்பணிக் காலி இடங்களுக்கான குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வேளாண் அல்லது தோட்டக்கலை பட்டயப் படிப்பு முடித்து, பதிவு செய்திருக்க வேண்டும்.    வயது வரம்பு மற்றும் பதிவு மூப்பு தொடர்பான இதர விவரங்களும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது பதிவு மூப்பு தொடர்பான விவரங்களில் விடுபாடுகள் அல்லது திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அத்தகைய பதிவுதாரர்கள் மட்டும் தங்களது அனைத்துக் கல்வி அசல் சான்றுகள், சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் வியாழக்கிழமை (6.1.2011), திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வரவேண்டும்.    

இத்தேதிக்குப் பின்னர் பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.   இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரனைத் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

BED / MED DEGREE EXAMINATION December 2010 Supplementary Results

BED / MED DEGREE EXAMINATION December 2010 Supplementary Results