திண்டுக்கல், ஜன. 5: வேளாண் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் பணிக் காலியிடங்களுக்கு, மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல், திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக் காலி இடங்களுக்கான குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வேளாண் அல்லது தோட்டக்கலை பட்டயப் படிப்பு முடித்து, பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு மற்றும் பதிவு மூப்பு தொடர்பான இதர விவரங்களும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது பதிவு மூப்பு தொடர்பான விவரங்களில் விடுபாடுகள் அல்லது திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அத்தகைய பதிவுதாரர்கள் மட்டும் தங்களது அனைத்துக் கல்வி அசல் சான்றுகள், சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் வியாழக்கிழமை (6.1.2011), திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வரவேண்டும்.
இத்தேதிக்குப் பின்னர் பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரனைத் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment