மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 2011&12க்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 350ம், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 559ம், தொடக்க நிலை ஆசிரியர் பணியிடங்கள் 606ம் காலியாக உள்ளன.
முதுகலை ஆசிரியர் மொத்த இடங்கள்: 350 (ஆங்கிலம்&31, ஹிந்தி&14, இயற்பியல்&37,வேதியியல்&41, பொருளியல்&34, வணிகவியல்&48, கணிதம்&41, உயிரியல்&21, வரலாறு&13, புவியியல்&16, கணினி அறிவியல்&51, பயோடெக்&3)
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தது 50 சதவீத தேர்ச்சியுடன் எம்.எஸ்சி., அல்லது எம்.ஏ., பட்டம். ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பாடம் பயிற்றுவிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 30.11.2010 அன்று 40க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
பட்டதாரி ஆசிரியர் மொத்த இடங்கள்: 559 ( ஆங்கிலம்&46, ஹிந்தி&58, சமூக அறிவியல்&28, அறிவியல்& 34, சமஸ்கிருதம்&26, கணிதம்&54, நூலகர்&23, கலைஅறிவியல்&93, எலக்ட்ரிக்கல்&127, உடற்கல்வி&70).
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் 50 சதவீத தேர்ச்சியுடன் பட்டப்படிப்பு மற்றும் பி.எட். ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பயிற்றுவிக்கும் திறன்.
வயது: 30.11.2010 அன்று 35க்குள்.
தொடக்கநிலை ஆசிரியர் மொத்த இடங்கள்: 606 (தொடக்க நிலை ஆசிரியர்கள்&592, இசை ஆசிரியர்&14). கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் இரண்டாண்டுகளுக்கு குறையாத ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ அல்லது பி.எட்.,
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.750/& இதை ஏதேனும் ஒரு இந்தியன் வங்கி கிளையில் பாங்க் சர்வீஸ் கட்டணம் ரூ.30 உடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.centralban kofindia.co.in இணையதளத்தையோ அல்லது அக்.30&நவ.5 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸையோ பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2010.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: 7.12.2010.
No comments:
Post a Comment