Saturday, November 20, 2010

சத்துணவு பணியாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு தேர்வு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பி.எட். முடித்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்புத் தேர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் மூலம் சத்துணவு அமைப்பாளராகவும், அங்கன்வாடி பணியாளர்களாகவும் பணியாற்றி வருபவர்களில் பி.எட்., தகுதி பெற்ற 302 (243 மற்றும் 59) பட்டதாரிகளை சிறப்புத் தேர்வுகள் மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க சிறப்பு போட்டி எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.

கல்வித்தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் ஒன்றை முதன்மைப் பாடமாக பயின்று இளங்கலைப் பட்டம் (பிஏ/பிஎஸ்சி/ பி.லிட்) மற்றும் பி.எட்., பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 

தேர்விற்கான விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ரூ.400 பணமாகவே அல்லது டிடியாகவோ செலுத்தி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ரூ.400க்கான டிடியை Teachers Recruitment Board, Chennai என்ற பெயரில் சென்னையில் செலுத்தத்தக்க வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் டிடி எடுக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் நவ. 1 முதல் 12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ நவ.12ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். 
சிறப்பு போட்டி எழுத்துத்தேர்வு 21.11.2010 அன்று சென்னையில் மட்டும் நடைபெறும். தேர்வு மைய விவரம் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும்.
கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம், ஈவெகி சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை&6ல் உள்ள தகவல் பலகையிலும், http://trb.tn.nic.in. என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment