Sunday, November 14, 2010

சி.ஏ., படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் உடனடி வேலைவாய்ப்பு

சென்னை: இந்தியாவில் சி.ஏ., படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் அதிகளவு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சென்னையில் 'இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியா'வின் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இதன் துணை தலைவர் ராமசாமி பேசியதாவது: நாடு முழுவதும் எங்களுக்கு ஐந்து மண்டலங்களில் 127 கிளைகள் உள்ளன. ஒரு லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் பெண்கள் உள்ளனர். ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களிடம் பயில்கின்றனர். ஆண்டுக்கு இரண்டு முறை 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்துகிறோம். நாட்டிலேயே முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே இருந்து 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இங்கிருந்து துபாய்க்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளோம். எங்களின் சர்வதேச கருத்தரங்கம் 2011 ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. வரும் டிச., இறுதியில் கொச்சியில் நடைபெறும் தென் மண்டல கருத்தரங்கில், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் அதிகளவு வேலைவாய்ப்புகள் உடனடியாக கிடைக்கிறது. துபாயில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சார்ட்டர்ட் அக்கவுன்டுகளாக பணிபுரிகின்றனர். இவ்வாறு ராமசாமி பேசினார்.

No comments:

Post a Comment