வி.ஏ.ஓ. தேர்வு: பிப்ரவரி 20 அல்லது மார்ச் 6-ல் நடத்த திட்டம்
சென்னை, நவ. 26: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுத் தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20 அல்லது மார்ச் 6-ல் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 1576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஆயிரத்து 77 என மொத்தம் 2 ஆயிரத்து 653 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியானது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் தேர்வுத் தேதி அறிவிக்கப்படாததால் இளைஞர்கள் பெரிதும் தவித்து வந்தனர்.
தேர்வை எதிர்கொள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது என்பதால், 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 20 அல்லது மார்ச் 6: இந்நிலையில், வி.ஏ.ஓ. தேர்வை நடத்துவதற்கான தேதிகளாக இரண்டு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்து வைத்துள்ளது.
பிப்ரவரி 20 அல்லது மார்ச் 6 ஆகிய இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் தேர்வை வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த முறையான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகக் கூடும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு தேதி அறிவிக்கப்படாத நிலை குறித்து, "தினமணி'யில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment